திருநள்ளார் பசுபதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்!
ADDED :4347 days ago
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் மேலசுப்ராயபுரத்தில் உள்ள ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவிலில் பசுபதீஸ்வரருக்கு காலை மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், பால்,தயிர், சந்தனம் மற்றும் பன்னீர் உள்ளிட்ட திரவங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின் 2 மூட்டை அரிசியில் சாதத்தை கொண்டு பசுபதீஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநள்ளார் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீரசாமி,கட்டளை விசராணை தம்பிரான் சுவாமிகள், ராஜாசுவாமிநாத சிவாச்சாரியர்,முன்னால் கமிஷனர் ராஜாராமன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.