மாயூரநாதர் சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூநாதர் சுவாமி கோயி லில் நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொ ந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் துலா உற்ச வம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 18 ம் தேதி துலா உற்சவ தொட க்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதனையடுத்து ஐப்பசி கடைசி 10 நாட்கள் உற்சவம் கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவாக 13 ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் தொடர்ந்து நேற்று திருத் தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த் திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதகைள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத் துடன் திருத்தேருக்கு எழுந்தருளினர். நேற்று மாலை 5மணிக்கு தேர் புறப்பட்டு கோயிலின் நான்குமாட வீதிகளை வலம் வந்து இரவு கோவிலை அடைந்தது. இதில் திருவாவடுதுறை ஆதின க ட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமி,கோயில் கண்காணிப்பாளர் குருமூர் த்தி, நகர் மன்ற தலைவர் பவானி, துணை தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏர õளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.