உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் கோயிலில் தேரோட்டம்!

வள்ளலார் கோயிலில் தேரோட்டம்!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர்(வள்ளலார்)கோயில் உள்ளது. இக்கோ யிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் சி றப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினர். தருமை ஆதீன  மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.  தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேர் கோயிலின் நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையைஅடைந்தது. இதில் கோயில் கண்காணி ப்பாளர் நடராஜன், தலைமை அர்ச்சகர் சுப்ரமணியசிவாச்சாரியார், பள்ளி செ யலாளர் சுப்ரமணியன், சீதாராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !