உளுந்தூர்பேட்டையில் வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4352 days ago
உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனையும், மாலை சுமங்கலி பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 3–வது கால யாகசாலை பூஜை நடந்தது. அதன்பின் யாகசாலையில் வைத்திருந்த புனிதநீர் கலசங்கள் மேளதாளத்துடன் கோவிலை சுற்றி கொண்டு வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாகசாலையில் கலசங்களில் இருந்த புனித நீர் கோவில் கோபுரகலசங்களில் விடப் பட்டு மகா கும்பாபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.