ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
ஆந்திரா; நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
முன்னதாக, இன்று ஆந்திரா வந்த பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார்,12 ஜோதிர்லிங்கங்கள், 52 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்தார். இந்த கோயிலின் தனித்துவமான அம்சம், ஒரே கோயில் வளாகத்தில் ஒரு ஜோதிர்லிங்கமும் ஒரு சக்தி பீடமும் இணைந்து இருப்பது, தனித்துவமான ஒன்றாக உள்ளது. இங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் கோவிலில் பிரகாரம் வலம் வந்து தரிசனம் செய்தார், ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவும் அவருடன் இருந்தார். தொடர்ந்து, பிரதாப்காட், ராஜ்காட், ராய்காட் மற்றும் ஷிவ்னேரி ஆகிய நான்கு அடையாளக் கோட்டைகளின் மாதிரிகளைக் கொண்ட தியான மந்திர் (தியான மண்டபம்) அடங்கிய நினைவு வளாகமான ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவையும் பிரதமர் பார்வையிட்டார்.
தனது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், முதல்வர் நாயுடு, "எனது ஆந்திரப் பிரதேச மக்களின் சார்பாக, நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி ஜியை எங்கள் மாநிலத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.