சோழவந்தான் கொடிபுலி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4385 days ago
சோழவந்தான்: மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கொடிபுலி கருப்புசாமி மற்றும் அய்யனார் ஊர்காவலன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது . அதையடுத்து, கோயிலில் உள்ள பரிகார தெய்வங்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.