உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் மலை மேல் ஏறத் தடை

திருப்பரங்குன்றத்தில் மலை மேல் ஏறத் தடை

திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் சுவாமி காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை மலையில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக, கோயிலில் வெள்ளிக்கிழமை மலையில் மகா தீபம் ஏற்றும் தாமிர அண்டாவை சுத்தப்படுத்தி பூஜை செய்யப்பட்டது.இந்த மகா தீபத்துக்காக 300 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணி, 10 கிலோ சூடம் ஆகியவை பயன்படுத்தப்படும். காரத்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நவ.15 முதல் நவ.18 வரை திருப்பரங்குன்றம் மலை மீது ஏற போலீஸார் தடை விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !