உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் பூஜைகளின் நேரம் மாற்றம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் பூஜைகளின் நேரம் மாற்றம்

திருக்கோவிலூர்: உலகளந்த பெருமாள் கோயிலில் தினமும் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன் நடை திறக்கப்படும். காலை 8 மணிக்கு துவங்கி 9.15 மணி வரை மூலவருக்கு திருப்பாவை சாற்று மறை சிறப்புப் பூஜைகள் நடக்கும். அப்போது பக்தர்கள் மூலஸ்தான சேவைக்கு அனுமதியில்லை. வரும் 17ஆம் தேதி முதல் காலை 6.45 மணிக்கு தொடங்கி காலை 8 மணி வரை பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் மூலஸ்தான தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு நடை திறந்து மதியம் 12 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அதன்பின் கோயில் நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு  திறக்கப்படும். மாலை 5.45 மணிக்கு அந்தி பூஜைக்காக மூலஸ்தான சேவை நிறுத்தப்பட்டு 7 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜைக்குப் பிறகு நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !