உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்

சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்

சிதம்பரம்: கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரி மலை ஐயப்பனுக்கு மாலை போட கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் துளசி மாலை அணிந்து விரதத்தைத் துவக்குவர். நேற்று கார்த்திகை முதல் நாள் என்பதால் சிதம்பரம் பகுதி ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை மாலை அணிந்தனர். இதனையொட்டி நேற்று மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து மாரியம்மன் சன்னதியில் குரு சாமி பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்து விரதத்தைத் துவக்கி வைத்தார். நேற்று காலை கடும் பனிப்பொழிவு இருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாது அதிகாலை முதல் கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் சன்னதி திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !