உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருந்தீஸர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு!

மருந்தீஸர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு!

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸர் ஸ்வாமி கோவிலில், கார்த்திகை தீப சிறப்பு விழாவையொட்டி, 10 ஆயிரம் தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது. மேலும், சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்மீக சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர். இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !