பழநியில் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள்
ADDED :4441 days ago
பழநி: கார்த்திகை மாதபிறப்பை முன்னிட்டு பழநி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலையணிந்தனர். பாதவிநாயகர் கோயில், திருஆவினன்குடிகோயில், கிரிவீதி ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் அதிகாலையில் மாலையணிந்தனர். ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு செல்லும் லட்சகணக்கான பக்தர்களுக்காக, கலர் ஆடைகள், துளசிமணிமாலை, பாசி மணிகள், இருமுடி பைகள் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்று மாலை அணிவதற்காக ஏராளமான பக்தர்கள் காவி வேஷ்டி, துண்டுகளை வாங்கிச் சென்றனர். வேஷ்டி,துண்டு,மாலைகளின் விலை, கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகி உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.