கார்த்திகை மாதம் பிறப்பு தேனி கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :4377 days ago
தேனி: கார்த்திதை மாத பிறப்பையொட்டி, தேனி கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கார்த்திகை மாத பிறப்பையொட்டி, நேற்று தேனியில் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள முருகன் கோயில், பெத்தாஷி விநாயகர் கோயில், கணேச கந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் குடும்பத்துடன் சாமி கும்பிட்டனர். பெத்தாஷி விநாயகர் கோயிலில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, அர்ச்சர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். அல்லிநகரத்தில் உள்ள சிவசக்தி விநாயகர் கோயிலில், இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வீடுகள் தோறும் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.