ஆழ்வார்குறிச்சி ஐயப்பன் கோயிலில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி
ADDED :4376 days ago
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி ஐயப்பன் கோயிலில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.கார்த்திகை மாதம் முதல் நாள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிய உகந்த நாள். 48 நாட்கள் விரதமிருந்து தை மாதம் முதல் நாள் ஜோதி தரிசனம் காண்பதற்காக இருமுடி கட்டி சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்வர்.ஆழ்வார்குறிச்சியில் சிவசைலம் மெயின்ரோட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று காலை மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், விசேஷ வழிபாடு நடந்தது. கணேச குருசாமி பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.