கடையம் கோயிலில் பவுர்ணமி வழிபாடு
ADDED :4376 days ago
ஆழ்வார்குறிச்சி: கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது.கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் பல மாதங்களாக நெல்லையை சேர்ந்த பக்தர் ஒருவர் பவுர்ணமி தோறும் அன்னதானம் செய்து வருகிறார். நேற்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகளும் அதனை தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.