உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் தர்மசாஸ்தாவுக்கு பாலாபிஷேகம்

காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் தர்மசாஸ்தாவுக்கு பாலாபிஷேகம்

காஞ்சிபுரம்: நகரீஸ்வர் கோயிலில் உள்ள தர்மசாஸ்தா சன்னதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் புறப்பட்டது.ஊர்வலம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வர் கோயிலை அடைந்தது. அங்கு 201 பால்குடங்களுடன் பெண்கள் தயார் நிலையில் இருந்தனர்.  இதைத் தொடர்ந்து 4 ராஜவீதிகள் வழியாக உற்சவ மூர்த்தி முன்னே செல்ல பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம், நகரீஸ்வரர் கோயிலில் முடிந்தது. அங்கு தர்மசாஸ்தா சன்னதியில் ஐயப்பனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !