திருவள்ளூர் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4376 days ago
திருவள்ளூர்: புல்லரம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி விநாயகர் கோயிலில் உற்சவர் ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த உற்சவருக்கு கார்த்திகை முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், 8.30 மணியில் இருந்து 10.30 மணிவரை கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. மாலை 6 மணியளவில் ஐயப்பன் திருவீதி உலா நடைபெற்றது.