கார்த்திகை லட்ச தீபத்தில் ஜொலித்த மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில்
ADDED :4376 days ago
திருக்கார்த்திகையை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதனால் கோயில் பொற்றாமரைக்குளம் உள்ளிட்டவை தீப ஒளியில் ஜொலித்தன. திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் பொற்றாமரைக்குளம், பிரகாரங்கள், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி பிரகாரங்கள், கம்பத்தடி மண்டபம் உள்ளிட்ட அனைத்துப் பகுதியிலும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. இதனால் கோயில் முழுதும் தீப ஒளியால் ஜொலித்தன.