உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோயில் ஏகதின லட்சார்ச்சனை

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோயில் ஏகதின லட்சார்ச்சனை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தனது மூன்றாவது கண்ணை திறந்து பார்ப்பதாக ஐதீகம். இதையடுத்து நவ நரசிம்மர் மற்றும் பானக நரசிம்மருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நரசிம்ம சகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றன. தம்பதிகள் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், கடன் நிவாரணம், தொழில் முன்னேற்றம், உலக அமைதி உள்ளிட்டவை நிறைவேறக் கோரி இந்த லட்சார்ச்சனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !