திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தேரோட்டம்!
ADDED :4365 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க அங்கி அலங்காரத்தில், 16கால் மண்டபம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைரத்தேரில் எழுந்தருளினர். ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். இன்று (நவ.,19) உச்சிகால பூஜை முடிந்து, உற்சவர் விடையாத்தி சப்பரத்தில் புறப்பாடும், தீர்த்த உற்சவமும் நடக்கிறது.