உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மதுரை: மதுரையில் உள்ள இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு  1008 சங்காபிஷேகம் நடந்தது. ஆண்டு தோறும் இக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் நடக்கும்.  அதேபோல் இந்த ஆண்டும் நேற்று  திங்கள் கிழமை காலை சிவன் வடிவில் 1008 சங்குகள் மற்றும் பூக்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மந்திரங்கள் முழங்க ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில்  நன்மைதருவாருக்கு சிறப்பான முறையில் சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த சங்காபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இனிவரும் கார்த்திகை சோமவாரங்களிலும் (நவ. 25, டிச. 2, டிச. 9 )இதுபோல,  சங்காபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !