சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு பால்குடம்
ADDED :4347 days ago
கும்பகோணம்: திருபுவனத்தை சேர்ந்த நெசவாளர்கள் கார்த்திகை சோமவார தினமான திங்கள்கிழமை காலை திருபுவனம் ஸ்ரீகம்பஹேரேஸ்வரர் ஆலயத்திலிருந்து பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம், பஞ்சாமிர்த காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை சுமந்து பாதயாத்திரையாக சுவாமிமலைக்கு சென்றனர். அங்கு சுவாமிநாத சுவாமிக்கு பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டன.