வேட்டைக்கொரு மகன்கோயில் சிவன் மலையில் கிரிவலம்
ADDED :4347 days ago
கூடலூர்: நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன்கோயில் சிவன் மலையில் கிரிவலமும், கார்த்திகை தீப விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோவிலில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது வழக்கம். இந்த மாதம் கார்த்திகை தீபமும், பவுர்ணமியும் ஒரே நாளில் வந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் மலையைச் சுற்றி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். மலை உச்சியில் அமைந்துள்ள 50 அடி உயர தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை கூடலூர் வட்டாட்சியர் எம்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.