சத்தியமங்கலம் மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை ஜோதி விழா
ADDED :4423 days ago
சத்தியமங்கலத்தில் இருந்து நம்பியூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள உக்கரம் மாதேஸ்வரன் மலைக்கோவிலில் கார்த்திகை ஜோதி விழா ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. விழாவையொட்டி, கோவிலில் உள்ள மாதேஸ்வரர், ஆஞ்சநேயர், நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் கரவொலியுடன் கருட கம்பத்தில் கார்த்திகை ஜோதியை கோயில் பூசாரி டி.பி. சுந்தரராஜ் ஏற்றினார். இந்த விஸ்வருப மஹா தீப ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.