உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு

ஆத்தூர் நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறை: ஆத்தூர் அருள்மிகு கோமளவள்ளி நாயிகா சமேத அருள்மிகு காசி சுகவாசி நாராயணப் பெருமாள் கோவில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெறவுள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோவிலில் அண்மையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. குடமுழுக்கு செய்ய முடிவானது. இதையடுத்து, திங்கள்கிழமை முதல்கால யாகபூஜைகள் தொடங்கின. கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !