கருண சாயி பாபா ஆலயத்தில் அய்யப்பனுக்கு 18 படி பிரதிஷ்டை!
ADDED :4345 days ago
செஞ்சி: செஞ்சி கருண சாயி பாபா ஆலயத்தில் உள்ள அய்யப்பனுக்கு 18 படி பிரதிஷ்டை விழா நடந்தது. செஞ்சி தாலுகா மகாதேவி மங்கலம் கூட்ரோடு கருணசாயி பாபா கோவிலில் உள்ள அய்யப்பனுக்கு கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு 17ம் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலையில் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து செப்பினால் செய்த 18 படிகளை பிரதிஷ்டை செய்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு ஹோமமும், மகா புஷ்பாஞ்சலியும் நடந்தது. தொடர்ந்து அன்னதானமும், ம õலை 6 மணிக்கு மகா தீபாராதனையும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.