லட்சுமி நரசிம்மர் கோவில் தைல காப்பு அபிஷேகம்!
ADDED :4348 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பெரணமல்லூர் ஆவணியாபுரத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு தினமும், 5 கால பூஜைகளும், சனிக்கிழமை தோறும் வார வழிபாடு நடக்கிறது.நேற்று காலை, 6 மணிக்கு கோவிலில், லட்சுமி நரசிம்மர், சீனுவாச பெருமாள், ரங்கநாதர், அலமேலுமங்கை தாயார், வரதராஜபெருமாள், யோக நரசிம்மர், மற்றும் பஞ்ச நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூலவர் சன்னதிகளில் மூலிகை பொருட்கள் கொண்டு தைல அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.