அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4347 days ago
புல்லரம்பாக்கம்: புல்லரம்பாக்கம், லட்சுமி விநாயகர் கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, அய்யப்பன் சன்னிதிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள லட்சுமி விநாயகர் கோவிலில், அய்யப்பன் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், புல்லரம்பாக்கம், சிறுவானுார், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில், அய்யப்பன் திருவீதி உலா நடைபெற்றது.