உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதநாராயணர் கோவிலில் 29ம் தேதி பவித்ர உற்சவம்

வேதநாராயணர் கோவிலில் 29ம் தேதி பவித்ர உற்சவம்

நகரி: நாகலாபுரம், வேதநாராயண சுவாமி கோவிலில் வரும், 29 மற்றும் 30ம் தேதிகளில், பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. சித்துார் மாவட்டம், நாகலாபுரம் மச்ச அவதார ஸ்தலமான வேத நாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் நடத்தப்படும் பவித்ர உற்சவம், வரும், 29ம் தேதி மாலை, அங்குரார்ப்பண நிகழ்ச்சிகளுடன் துவங்குகிறது. இதையொட்டி, மூலவர், தாயார் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மறுநாள், 30ம் தேதி காலை, யாகசாலை ஹோம பூஜையில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், பழ ரசங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மதியம், பவித்ர சமர்ப்பணம், மாலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை, சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, நாகலாபுரம் மாட வீதிகளில் வலம் வருகிறார். இரவு, 8:30 மணிக்கு, பவித்ர உற்சவம் நிறைவையொட்டி, பூர்ணாஹூதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !