சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :4346 days ago
வேதாரண்யம்: வேதாரண்யத்தில், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி சிவலிங்கத்துக்கு சங்காபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூஜை செய்து, கோவில் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரருக்கு சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இதேபோல, வேதாரண்யம் நாகை ரஸ்தா காசிவிஸ்வநாதர் ஸ்வாமி கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், கோடியக்காடு குலகர் கோவில், அகஸ்தியம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில் உள்பட சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, வழிபட்டனர்.