உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவ., 25ல் உலக அமைதிக்கு 1,008 லிட்டர் பாலபிஷேக பூஜை!

நவ., 25ல் உலக அமைதிக்கு 1,008 லிட்டர் பாலபிஷேக பூஜை!

தஞ்சாவூர்: உலக அமைதிக்காக, காசியில், விஸ்வநாதர் கோவிலில் ஸ்வாமிக்கு வரும் 25ம் தேதி, 1,008 லிட்டர் பாலபிஷேக சிறப்பு பூஜை நடக்கிறது என, ஓங்காரநந்தா ஆசிரம சீடர் சர்வாத்மானந்தா தஞ்சையில் கூறினார். புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஓங்காரநந்தா ஆசிரமத்தின் மகாதிபதி ஸ்வாமி ஓங்கார நந்தாவின் சீடர் சர்வாத்மானந்தா தஞ்சையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: மாதாஜி சித்தர் அக்கினி பிரவேச நிகழ்வையொட்டி, உலகத்திலுள்ள உயிர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், உலக அமைதிக்காகவும் வரும் 25ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, காசியிலுள்ள விஸ்வநாதர் கோவிலில், ஸ்வாமிக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, காசியில், விஸ்வநாதர் ஸ்வாமி கோவிலுக்கு ஊர்வலம், மேள தாள கொடிகளுடன் சென்றடைகிறது. அங்கு, காசி விஸ்வநாதர் ஸ்வாமிக்கு பாலபிஷேகம் நடக்கிறது. கோவிலுள்ள அனைத்து சிவ லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படும். தர்மம் தழைக்கவும், ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டியும் இத்தகைய அபிஷேக நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்கான ஏற்பாடு ஸ்வாமி ஓங்காரனந்தா தலைமையில் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !