குமரன் கோவிலில் கார்த்திகை வழிபாடு!
ADDED :4354 days ago
ஆக்கூர்: குமரன் கோவிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் ஆறுமுக சாமிக்கு 108 லிட்டர் பால், 108 இளநீர், பழச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.