உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குராயூர் கோபாலர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

குராயூர் கோபாலர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

திருமங்கலம்: திருமங்கலம் அருகிலுள்ள குராயூர் வேணுகோபாலசுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.17ம் நூற்றாண்டில் கட்டிய இக்கோயிலில் 80 ஆண்டுக்குப் பிறகு, திருப்பணி நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு விஷ்வக்சேனர் ஆராதனம், புண்யாவாஹவாசனம், ஸுதர்சன ஹோமம், மாலை 5மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், த்வாரபூஜை, திவ்யபிரபந்த பாராயணம் நடக்கிறது. இரவு 9மணிக்கு பூர்ணாஹுதி, திருவாராதனம் நடத்தப்படும். நாளை காலை 6மணிக்கு விஸ்வரூபம், ஹோமம், 8மணிக்கு பூர்ணாஹுதி, சாற்றுமுறை, 8.30க்கு யாத்ராதானம் நடக்கிறது. 8.30-10மணிக்குள் மகாசம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மாலதி, உதவி ஆணையர் கருணாநிதி மற்றும் வேணுகோபால சுவாமி சேவா டிரஸ்ட் செய்துள்ளனர். திருக்கோஷ்டியூர் லட்சுமி நரசிம்ம அய்யங்கார், அர்ச்சகர் கார்த்திக் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !