உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1008 தீபம் ஏற்றி கார்த்திகை வழிபாடு!

1008 தீபம் ஏற்றி கார்த்திகை வழிபாடு!

வால்பாறை: வால்பாறை நகைக்கடை வீதியில், 1008 விளக்குகள் வைத்து மக்கள் கார்த்திகை தீபம் ஏற்றினர். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருநாள் மூன்றாம் நாளான நேற்றுமுன்தினம், வால்பாறை நகைக்கடை வீதியை சேர்ந்த வியாபாரிகள் இணைந்து, நடைபாதையில் 1008 விளக்குகளில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !