உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளமையாக்கினார் கோவில் குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றம்!

இளமையாக்கினார் கோவில் குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றம்!

சிதம்பரம்: இளமையாக்கினார் கோவில் குளத்தில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை பொதுமக்களே அகற்றி, குளத்தை சுத்தம் செய்தனர். சிதம்பரம் நகரில் நகராட்சி குளம் உள்ளிட்ட 13 குளங்கள் நீண்ட காலமாக தூர் வாரப்படாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. சிதம்பரம் இந்து ஆலய பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஓமக்குளம், அண்ணா குளம், யானைக்குளம், தில்லை காளியம்மன் குளம் ஆகியவையை தூர் வாரப்பட்டன. இளமையாக்கினார் கோவிலுக்கு சொந்தமான குளத்தை அப்பகுதி மக்கள் மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் சேர்ந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன் தூர் வாரினர். இந்த குளங்களில் சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பி வருகிறது. இந்நிலையில், இளமையாக்கினார் குளத்தில் ஆகாயத்தாமரை செடி அதிக அளவில் முளைத்துள்ளது. அதனால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே ஒன்று சேர்ந்து குளத்தில் இருந்த ஆகாயத்தாரை செடிகளை அப்புறப்படுத்தினர். தற்போது குளம் சுத்தமாக காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !