காரைக்கால் சித்திவினாயகர் கோவில் பந்தக்கால் முகூர்த்தம்!
ADDED :4361 days ago
காரைக்கால்: காரைக்கால் ஆற்றங்கரை சித்திவினாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள ஆற்றங்கரை சித்திவினாயகர், செந்தில்குமாரர், கனகதுர்க்கை, நவக்கிரகங்கள், தெட்சிணா மூர்த்தி ஆகிய சுவாமிகளுக்கு, டிசம்பர் 9ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி, நேற்று காலை சித்தி வினாயகருக்கு பூஜை மற்றும் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.