உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சீசன் எதிரொலி ஸ்ரீவி.,க்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

சபரிமலை சீசன் எதிரொலி ஸ்ரீவி.,க்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: சபரிமலை சீசன் துவங்கியிருப்பதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் பக்தர்களின், எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், செங்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக, மதுரை செல்லும் பக்தர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, ஐயப்ப பக்தர்களின் வருகை, ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள், ஆண்டாள் கோயில் செல்வதற்காக, தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதியாக, கடந்தாண்டு போல், தெற்கு ரதவீதிகளில் ஏற்பாடு செய்தால், சிரமமின்றி இருக்கும். மேலும், கீழ ரதவீதிகளில் ரோட்டின் ஓரத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதை தடுக்க, தேரடி, வடக்கு ரதவீதி சந்திப்புகளில், கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும். தற்போது சுற்றுலா வரும் பயணிகள், ரதவீதிகளில் குப்பையை எறிந்து செல்வதோடு, தெற்கு ரதவீதியை கழிப்பறையாக மாற்றி விடுகின்றனர். இதை தடுக்க, நகராட்சி சார்பில், கழிப்பறை குறித்த அறிவிப்பை, பெரிய அளவில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென, மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !