பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :4354 days ago
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது சோளீஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு 18-ம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த பூஜையில் ஐய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் 18 படி பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் 108 திருவிளக்கு பூஜையில் பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.