திருப்பரங்குன்றம் ஆறுமுகனார் கோயிலில் விமான திருப்பணி
ADDED :4354 days ago
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான ஆறுமுகனார் திருக்கோயில் சரவணப்பொய்கையில் அமைந்துள்ளது. இப்பொய்கையில் தான் முருகப்பெருமான் தோன்றியதாக ஐதீகம். சஷ்டி திருவிழாவின் போது தீர்த்த உற்சவத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் உள்ள ஆறுமுகனார் கோயிலில் எழுந்தருள்வார். இங்கு அமைந்துள்ள ஆறுமுகனார் திருக்கோயிலில் விமானம் (கோபுரம்) உபயதாரர்கள் மூலம் ரூ.3.50 லட்சம் செலவில் புதிய துவிதள விமானம் கட்டும் திருப்பணி தற்போது நடைபெற்று வருகின்றது.