பூமிலட்சுமியம்மன் கோவிலுக்குஏழரை அடி உயர சிலை வருகை
ADDED :4342 days ago
உடுமலை:உடுமலை அருகே பூமிலட்சுமியம்மன் கோவிலில், பிரதிஷ்டை செய்ய ஏழரை அடி உயர அம்மன் சிலை கொண்டு வரப்பட்டுள்ளது.உடுமலை அருகே குறிஞ்சேரியில், பழமை வாய்ந்த பூமிலட்சுமியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சன்னதி கட்டுமான பணிகள் நிறைவுற்ற நிலையில், கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக அம்மன் சிலை திருமுருகன்பூண்டி பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.ஏழரை அடி உயர அழகுநாச்சியம்மன் சிலை அங்கிருந்து கொண்டு வரப்பட்டு, கோவில் வளாகத்தில் நவ 22 வைக்கப்பட்டது. சிலைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. விரைவில், சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.