உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகர்கோவிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் கோலாகல விழாவில் பக்தி பரவசம்

நாகர்கோவிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் கோலாகல விழாவில் பக்தி பரவசம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் விட்டல் ருக்குமணி சேவா அறக்கட்டளை மற்றும் கிருஷ்ண பக்த சேவா அ"றக்கட்டளை சார்பில் நடந்த பக்தி திருவிழாவில் நிறைவு நாளான நேற்று ராதா கல்யாண மஹோத்ஸ்வம் நடந்தது. நாகர்கோவில் விட்டல் ருக்குமணி சேவா அறக்கட்டளை மற்றும் கிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளை சார்பில் பக்தி திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடந்தது. கோட்டார் டி.வி.டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தநிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று ராதாகல்யாண மஹோத்ஸவம் நடந்தது. நிகழ்ச்சியில் மகளீர் அமைப்புகள் சார்பில் கோட்டார் வணிகர் தெருமுப்பிடாரி அம்மன் கோவிலிலிருந்து சீர்வரிசை பொருட்கள் பானை மற்றும் குதிரைகளில் ஊர்வலசாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு நாதஸ்வரம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு ராதாகல்யதண மகோத்ஸ்வம் நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரீவிட்டல் மகராஜ் சுவாமி, மற்றும் குழுவினரின் தெய்வீக பஜனை, ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.தொடர்ந்து சிறப்பு உபன்யாசம் நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விட்டல் ருக்மணி சேவா அறக்கட்டளை,கிருஷ்ணபக்த சேவா மற்றும் இந்து அமைப்புகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !