பெரியகலையம்புத்தூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை!
ADDED :4334 days ago
பழநி: நெய்க்காரப்பட்டி அருகே பெரியகலையம்புத்தூரில் மழைவேண்டி, சிறப்பு தொழுகை, பிரார்த்தனை நடந்தது. பழநி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பழநி வட்டாரத்தில், குடிநீர், விவசாய தேவைக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பெரியகலையம்புத்தூர், நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த கிராமமக்கள், மழை பெய்ய வேண்டி, "ஈதுகா மைதானத்தில் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை செய்தனர். சமபந்தி விருந்து நடந்தது. அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.