கன்னியாகுமரியில் ரூ.6 கோடியில் ராமாயண கண்காட்சி கூடம்
நாகர்கோவில்: ராமாயண இதிகாசத்தின் நிகழ்வுகளை விளக்கும் வகையில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில், 6 கோடிரூபாய் செலவில் கண்காட்சிகூடம் அமையவுள்ளது. ராமாயண நிகழ்வுகளை ஒரே இடத்தில், ஓவியங்களாக வரைந்து, பார்வையாளர்களை அறியச் செய்யும் வகையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரத்தில், 6 கோடி ரூபாய் செல்வில் கண்காட்சி கூடம் அமைய உள்ளது. இதற்காக, விவேகானந்த கேந்திராவின் நுழைவுபகுதியில், அவை கூடமாக இருந்த பகுதி அகற்றப்பட்டு, 7,000 சதுரை அடியில், 2 மாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. அங்கு ராமாயண காட்சிகள் மூலிகை ஓவியங்களாக வரையப்படவுள்ளது.மேலும், அனந்த சயனத்தில் பெருமாள், ராமர் பட்டாபிஷேகம் மற்றும் அனுமர் படங்கள் பெரிதாக வைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது. கண்காட்சிகூடத்தின் முன்பகுதியில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில், 27 அடி உயரத்தில், ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. இதில் 9 அடியில் ஆதாரபீடமும், 18 அடி உயரத்தில் சிலையும் அமைய உள்ளது.