உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசடையப்பர் கோவில் கால பைரவருக்கு அபிஷேகம்

சிவசடையப்பர் கோவில் கால பைரவருக்கு அபிஷேகம்

புதுச்சேரி: பேட்டையன்சத்திரம் சிவசடையப்பர் கோவில் காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தட்டாஞ்சாவடி பேட்டையன்சத்திரத்தில் அமைந்துள்ள சிவசடையப்பர் கோவிலில், கார்த்திகை மாத ஜென்ம அஷ்டமியை முன்னிட்டு, கோவிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு நேற்று இரவு 7.00 மணிக்குமேல் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !