கம்பராமாயண தொடர் முற்றோதல் விழா
ADDED :4340 days ago
தேவகோட்டை: தேவகோட்டை, தமிழ் இலக்கியப் பணி மன்றம் சார்பில், கம்பராமாயண தொடர் முற்றோதல் நிறைவு மற்றும் நாலாயிர திவ்யபிரபந்தம் முற்றோதல் துவக்கவிழா நடந்தது. கவிஞர் அருசோமசுந்தரன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுப்பையா வரவேற்றார். பட்டிமன்ற நடுவர் சிற்சபேசன், ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், பேராசிரியர் தேவநாவே, தலைமை ஆசிரியர் சீனிவாசன், லயன்ஸ் நிர்வாகி கார்மேகம், செயலாளர் ஐயப்பன், அண்ணாமலை, சின்னஅலமேலு,ஜோதிசுந்தரேசன் பேசினர். விசாலாட்சி பரிசுகள் வழங்கினார். உமா நன்றி கூறினார்.