சிவலோகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :4340 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்றுமுன்தினம் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், அரிசி மாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு ரோஜா, எலுமிச்சை, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டன. தொடர்ந்து சிவலோகநாதருக்கு முதல் பூஜை செய்யப்பட்டது. சிவலோகநாயகி, முருகர், நடராஜர் சிலைகளுக்கு பூஜை செய்தபின், இறுதியாக மாலை 6.30 மணியளவில், கால பைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து காலபைரவரை வழிப்பட்டனர். மாதம் ஒரு முறை வரும் தேய்பிறை அஷ்டமியானது, கார்த்திகை மாதம் காலபைரவருக்கு பிறந்தநாள் அன்று வந்ததால், கூடுதல் சிறப்பு ஏற்பட்டது.