திருச்செந்தூரில் ஜெயேந்திரர் சாமி தரிசனம்!
ADDED :4338 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் சுவாமி தரிசனம் செய்தார். சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் திருச்செந்தூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கியிருந்த ஜெயேந்திரர். இன்று காலை 5.15 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் , 7.15 மணிக்கு வெளியேறிய ஜெயேந்திரர் பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளிக்காமல், புறப்பட்டு சென்று விட்டார்.