உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாகத்தில் குருபூஜை விழா நடந்தது. திருநீற்றுச் செல்வர் என போற்றப்பட்டு திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார். இவருக்கு வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்தி வளாகம் அமைந்துள்ளது. நாயனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு சித்தி வளாகத்தில் துறவிகள் மற்றும் அடியார்கள் பலரும் வழிபாடு நடத்தினர். காலை 8.30 மணிக்கு பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர், மெய்ப்பொருள் நாயனாருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கலியபெருமாள் சுவாமிகள், சங்கர்ஜி முன்னிலை வகித்தனர். அஞ்சுகம் ஆதிசங்கர், பேரூராட்சி தலைவர் தேவி முருகன் குத்து விளக்கேற்றினர். ஆத்மலிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை, மலர் வழிபாடு, ஒளிவழிபாடு நடத்தினர். ராமமூர்த்தி, மாணிக்கவாசகம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சம்பத், ஜெயபாலன், பக்தர்கள் சங்கர், கார்த்திகேயன், முருகன், சீனுவாசன், சக்திவேல், ரத்தின மாணிக்கம், தில்லைநடராஜன், அயோத்தி, கோகிலாம் பாள் அருணாசலம், அம் பலவாணன், உதியன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ் வேத வாரவழி பாட்டு சபை சார்பில் பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !