ஐயப்பன் பூஜையில்... பெண்களுக்காக திருவிளக்கு பூஜை!
ADDED :4347 days ago
சென்னை: தேனாம்பேட்டை நாட்டுமுத்துத் தெருவில் உள்ள விளையாட்டு விநாயகர் - ஹரிஹர புத்ர சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஹரிஹர புத்ரன் பக்தர்கள் சேவா சங்கத்தினர் கடந்த 14 வருடங்களாக, ஐயப்ப சுவாமிக்கான விழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இந்த வருடம், டிசம்பர் 5-ஆம் தேதி மற்றும் 6-ஆம் தேதிகளில், சம்வத்ஸரோத்ஸவ விழாவும், திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. சிறப்பு ஹோமங்கள், சர்வ அலங்கார ஆராதனைகள், தொட்டில் உத்ஸவ வழிபாடு, புஷ்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, அன்னாபிஷேகம், திருவாபரணப் பெட்டி ஊர்வலம் என விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அமர்க்களமாகவும் ஆன்மிகத்தைப் பரப்புவதாகவும் இருக்கும் என்கின்றனர் ஐயப்ப சுவாமி பக்தர்கள்!