திருமலையில் மாடவீதியை அகலபடுத்தும் பணி துவக்கம்!
ADDED :4343 days ago
திருப்பதி: திருமலையில், மாட வீதியை அகலப்படுத்தும் பணியை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முன்தினம் துவக்கியது.திருமலையில், பிரம்மோற்சவத்தின் போது, தேரோட்டம் நடைபெறும். தேர் வீதியுலா வரும்போது, தெற்கு மாட வீதியில், தேரை திருப்ப சிரமம் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியை அகலப்படுத்த, அருகில் உள்ள, ஹதிராம்ஜி மடத்தின் நிலத்தை தேவஸ்தானம் கேட்டது. மடம் உடன்படாததால், தேவஸ்தானம், தெற்கு மாட வீதியை அகலப்படுத்த, தன் நிலத்தையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது.சகஸ்ர தீபாலங்கார மண்டபத்தை இடித்து, அதை உள்நோக்கி நகர்த்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள், காத்திருக்கும் இடத்தை, நாதநீராஜன மண்டபம் அருகில், மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, செய்வதன் மூலம், மாடவீதி அகலமாகும். இப்பணி நேற்று முன்தினம் துவக்கப்பட்டது.