விளாத்திகுளத்தில் மழைவேண்டி கோயிலில் பிரார்த்தனை
ADDED :4340 days ago
விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் மழை வேண்டி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விளாத்திகுளம் பகுதியில் போதுமான மழை பெய்யாததால் விவசாயிகள் மனம் உடைந்து விரக்தியில் உள்ளனர். இந்நிலையில் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது. விளாத்திகுளத்தில் உள்ள கற்பகவிநாயகர் நவநீத கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சார்பில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வீராடபாவம் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவு நடந்தது. கோயில் பட்டர் சுந்தரராஜ் துவக்கி வைத்தார். சொற்பொழிவாளர் இளையராஜா பேசினார். சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.